தகடூர் என்று சொன்னால் தமிழர்களுக்கு அதியமான் நினைவுக்கு வந்துவிடுவார்....!

 தகடூர் என்று சொன்னால் தமிழர்களுக்கு அதியமான் நினைவுக்கு வந்துவிடுவார். அதனால் அதை தருமபுரி என்று பெயர் மாற்றுங்கள்... 

பறம்புமலை என்று சொன்னால் பாரி மன்னன் நினைவுக்கு வந்துவிடுவான் அதனால் பிரான்மலை என்று பெயர் மாற்றுங்கள்..... 

சோழ ஏரி என்று சொன்னால் அவனுக்கு பெருமை பீறிக்கொண்டு வந்துவிடும் அதை இந்தியப்பெருங்கடல் என்று மாற்றுங்கள்... 

தமிழ்நாடு என்று சொன்னால் நாடு என்ற எண்ணம் வந்துவிடும், அதை தமிழகம் என்று மாற்றுங்கள்..

தமிழ்மொழிக்குடும்பம் என்று பெருமைப்படுத்திவிடாதீர்கள் திராவிட மொழிக்குடும்பத்துக்குள் தமிழை அடைத்து சிறுமைப்படுத்துங்கள்.

இறுதியாக தமிழன் என்று சொல்லவிடாதீர்கள். 

திராவிடன், இந்தியன் என்ற முகமூடிகளை மாட்டிவிடுங்கள்... 

இப்படி வந்தவன் போனவன் வைத்த பெயர்களையெல்லாம் தலைமேல் வைத்த காலம் அழியட்டும்......

தமிழர் வரலாறு எழுச்சிபெறட்டும்... 🔥

No comments:

Post a Comment

விநாயகர் சதுர்த்தி PROMPT

  Create a highly realistic, premium cinematic Tamil Vinayagar Chaturthi greeting poster in 9:16 vertical format, using the uploaded referen...