இன்று திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றம்.
🌹திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்தின் சிறப்புகள்.
🌹திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தைநேரில் பார்ப்பவர்கள் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
🌹திருவண்ணாமலை தீபத்தன்று மலை யை பார்த்து நமசிவாய சொன்னால் அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
🌹திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற் றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலு ம்,பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரம ணர்,சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.
🌹திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால்,அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
🌹தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலு ம், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்க ளில் கூறப்பட்டுள்ளது.
🌹மலை மீது தீபம் ஏற்றப்படும் போது,“தீப மங்கள ஜோதி நமோ!!நம”என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.
🌹கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும்.
🌹திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை.அப்படி வரும் சித்தர்க ள், மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்ப ரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல் கிறார்கள்.இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை,தீய சக்திகளை அழிப் பதாக கருதப்படுகிறது.
🌹திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது.கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.
🌹கார்த்திகை தீபத்துக்கு சர்வாலய தீபம்,
கார்த்திகை விளக்கீடு, ஞானதீபம், சிவ ஜோதி, பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌹கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங் கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய் தால்,அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
🌹கார்த்திகைதீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு, சகல தானம் கொடுப்பதால், கிடைக்கும் புண் ணியங்கள் கிடைக்கும்.
🌹கார்த்திகை மாதம்,கார்த்திகை நட்சத் திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிப ட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
🌹திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.மலை உச்சியில் ஏற்ற ப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
🌹திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம்,
அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம்,
நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த் திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.
🌹சிவபெருமான் கார்த்திகை தீபநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.
🌹கார்த்திகை தீபம் தினத்தன்று ஆலயங் களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள் ஆனால் திருவண்ணாமலையில் சொக்க ப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.
🌹தீப நாளில் மலை மேல் தீபம் காண முடி யாதவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை நினைத்தாலே,அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
🌹திருவண்ணாமலை கார்த்திகை தீபத் துக்கு நிகராக இது வரை எந்த ஆலயத்தி லும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.
🌹திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்டசராசரங்களுக் கும் தீப விளக்காக கருதப்படுகிறது. உலக த்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொரு ள் ஒன்றேஎன்பதை “இறைவன் ஒருவனே” என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
🌹கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திரு வண்ணாமலை கோவிலில் பரணி நட்சத் திர நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள்.பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.
🌹திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.
🌹 திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட் டதும், “அண்ணாமலையாருக்கு அரோக ரா”என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? “இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித் து,மனதை ஆன்மாவில் அழித்து, உள்முக த்தால் அத்வைத ஆன்ம ஜோதியை காண் பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்” இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.




No comments:
Post a Comment