சைக்கிள் ஓட்டினால் உலக பொருளாதாரமே சீரழியும்...


தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...

ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க.....

ஏன்னா சைக்கிள்ல போறவன் 

கார் வாங்க மாட்டான்...

பைக் வாங்க மாட்டான்....

அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...

வட்டியும் கட்ட மாட்டான்...

பேங்க், பைனான்ஸ் கம்பெனிகள் எதுக்கும் 

சல்லி பைசாவுக்கு கூட 

பிரயோஜனம் இல்லாதவன்.

இவன்...

கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு 

போக மாட்டான்...

இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...

இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...

சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...

பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...

இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...

இவனுக்கு சுகர் வராது...

இதய நோய் வராது...

குண்டாகவும் மாட்டான்...

ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...

உலக பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...

அதே சமயம் 

ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...

10 இதய டாக்டர்...

10 பல் டாக்டர்...

10 டயட்டீசியன்...

இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...

உடனே முடிவெடுங்க

சைக்கிளா...?

பைக்கா... ? 

காரா...?

உலக பொருளாதாரமா....???

உங்க உடல் நலமா....???

No comments:

Post a Comment

விநாயகர் சதுர்த்தி PROMPT

  Create a highly realistic, premium cinematic Tamil Vinayagar Chaturthi greeting poster in 9:16 vertical format, using the uploaded referen...