பாகப்பிரிவினை.. பூர்வீக சொத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு பத்திரம் எழுதணுமா...?

பாகப்பிரிவினை என்றால் என்ன.? பாகப்பிரிவினை என்பது மிகப்பெரிய கடல் போன்ற விஷயமாகும்.. எனினும், அதுகுறித்து கட்டண பதிவு குறித்து மட்டும் ஒருசில விஷயங்களை மட்டும் பார்ப்போம்.


நம்முடைய நாட்டை பொறுத்தவரை, பாகப்பிரிவினை என்றாலே பெரும்பாலும் சொத்து பிரச்சனை வெடித்து விடுகிறது.. எவ்வளவுதான் திட்டமிட்டு செயல்பட்டாலும், பல நேரங்களில் சுமுகமாக பாகப்பிரிவினைகள் நடப்பதில்லை..


வாரிசுகளுக்குள் சிக்கல்களும், அதிருப்திகளும், ஏமாற்றங்களும், ஏற்படுவதால் விவகாரம் சிக்கலாகிறது. அத்துடன் கோர்ட் வரை செல்ல வேண்டியதாகிவிடுகிறது.


பூர்வீக சொத்தை பிரித்து எழுதி வைப்பதே பாகப்பிரிவினை.. அதாவது அப்பா வழி சொத்தில், வாரிசுகளுக்கு கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை.. இது குடும்பத்துக்குள்ளேயே செய்து கொள்ளும் சொத்து உடன்படிக்கை பத்திரமாகும். சுருக்கமாக சொல்லப்போனால், சுயமாக சம்பாதித்த சொத்தினை உறுப்பினர்களுக்கு பிரித்து எழுதுவதாகும்.


உரிமை மாற்றம்: ஒரு சொத்தை இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ, அதற்கு மேல் எவ்வளவு விருப்பமோ, அந்த அளவுக்கு பிரித்து, உரிமை மாற்றம் செய்யலாம்.. குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் இது நடக்கும்..


சொத்துக்களை சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக பிரிக்க வேண்டும்.. ஒருவேளை பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாக பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது வாரிசுகளில் ஒருவருக்கு மட்டும் பாகம் கிடைக்காதபட்சத்தில் அல்லது அவர்களில் யாருக்காவது ஒருத்தருக்கு ஆட்சேபனை இருக்கும்பட்சத்தில், அந்த பாகப்பிரிவினையை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்லலாம்.


விடுதலை பத்திரம்: அதேபோல, தங்களுக்கு பாகப்பிரிவினை சொத்து வேண்டாம் என்று யாராவது சொன்னால், அவர்களிடமிருந்து விடுதலை பத்திரம் எழுதி வாங்கி கொள்ளலாம். இதனால் பல பிரச்சனைகளை பின்னாளில் தவிர்க்கலாம்.


பாகப்பிரிவினையை குடும்ப உறுப்பினர்களுக்கும், குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் எழுதி வைக்கலாம்... இதில், குடும்ப உறுப்பினர்களுக்கு, சொத்துக்களை பாகப்பிரிவினை செய்வதாக இருந்தால், முத்திரை தாள் கட்டணம் 1 சதவிகிதம் அதாவது அதிகபட்சமாக 25,000 ரூபாயும், பதிவுக்கட்டணமாக 1 சதவிகிதம் அதாவது அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.


பாகச்சொத்து: அதாவது, அவரவர் பாகச்சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்ப் கட்டணமும், 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.. அதிலும் சலுகையாக, ஸ்டாம்ப் கட்டணம் மிக அதிகபட்சமாக ரூ.25,000/-ம், பதிவுக் கட்டணம் மிக அதிக பட்சமாக ரூ.4,000/- செலுத்தினால் போதும் என்று, இந்திய முத்திரைச் சட்டத்தில் (தமிழ்நாடு திருத்தல் சட்டத்தில்) சொல்லப்பட்டுள்ளது.


குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு தரும் சொத்து என்றால், முத்திரைத்தீர்வு கட்டணம் 4 சதவீதம் (சந்தை மதிப்பு) மற்றும் பதிவுக்கட்டணம் 1 சதவீதமும் கட்ட வேண்டுமாம்.


அதுமட்டுமல்ல, பாகப்பிரிவினை செய்யும்போது சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்த மத ரீதியான சட்டம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு பாகப்பிரிவினையை செய்துக்கொள்ள சட்டம் தக்கவழிவகைகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பட்டா உள்ளதா: அதேபோல, சொத்து பாகப்பிரிவினை செய்து தந்தவர் அந்த சொத்தினை ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளதா? அல்லது அதை பற்றி பத்திரத்தில் ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை அறிய வேண்டும்..


அதேபோல சொத்தை விற்பவர், அந்த சொத்தை அவரது பெயருக்கு மாற்றிவிட்டாரா? அதற்கு பட்டா பெற்றிருக்கிறாரா? என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒருவருக்கு சொத்துக்கள் இருந்தாலும், அந்த சொத்துக்களை விற்பவரின் பெயரில் பட்டா இருக்காது .. அப்படி பட்டா இல்லாவிட்டால், பிற்காலத்தில் சிக்கலை தந்துவிடும்.. எனவே, பட்டா விற்பவரின் பெயரில் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது நல்லதாகும்.

No comments:

Post a Comment

VOTER ID

 வோட்டர் ஐடி மிகவும் பழைமையானதாக உள்ளதா இங்கே க்ளிக் செய்து புதுமையானதாக மாற்றிக் கொள்ளவும்...      Click