பத்திரப்பதிவில் அதிரடி.. விஸ்தீரணம், அடங்கல் ஓகே! நிலப்பட்டாவில் அதென்ன சிட்டா...?

 பத்திரங்களை பதிவு செய்யும்போது, சில சொற்கள் தவிர்க்க முடியாதவை.. அந்தவகையில், ஒரு சில சொற்களையும், அதற்கான அர்த்தங்களையும் சுருக்கமாக பார்ப்போம்.


வீடுகள், மனைகள், நிலங்கள் வாங்குபவர்கள் அதற்கான ஆவணங்களை வழங்கி, அவைகளை பெற வேண்டும். ஆனால், அத்தகைய ஆவணங்களில் சில சொற்கள் அல்லது வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்... இந்த சொற்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும், இவைகளின் அர்த்தம் பலருக்கும் புரிவதில்லை.


ஆவணங்கள்: அப்படி ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுவதுதான் விஸ்தீரணம்.. ஒரு நிலத்தின் பரப்பளவை சொல்வதே விஸ்தீரணமாகும்.. அதாவது, சம்பந்தப்பட்ட நிலத்தின் எல்லைகளை குறிப்பதாகும்.


பழைய பத்திர ஆவணங்களில் இந்த வார்த்தை அதிகமாக புழங்கப்படும்.. அதாவது பழைய செட்டில்மென்ட் ஆவணங்களை வாங்க நேர்ந்தால், இந்த வார்த்தை அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.. ஒரு நிலம், பழைய செட்டில்மென்ட் காலத்தில் யாரிடமிருந்தது அல்லது ஏதாவது ஒரு காரணத்திற்காக இந்த விஸ்தீரணம் என்பது தேவையாக உள்ளது.. அதனால்தான், முந்தைய காலத்தில், அதிக புழக்கத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.


சான்றிதழ்கள்: இப்போதுகூட Tnreginet என்ற பதிவுத்துறையின் வெப்சைட்களில், வில்லங்க சான்றிதழை தேடினால், இந்த விஸ்தீரணம் மற்றும் உரிமை மாற்றம் செய்யப்பட்ட விஸ்தீரணம் பற்றி கேட்கப்பட்டிருக்கும். இவை இரண்டுமே நிலத்தின் மனையின் பரப்பளவை சொல்லக்கூடியதாகும்.


வில்லங்கம் என்ற வார்த்தை அதிகமாக புழங்கக்கூடிய வார்த்தையாகும்.. ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண்கள், அந்த நிலத்தின் உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் அளவு, சர்வே விவரம் போன்ற அனைத்து விவரங்களும் அடங்கியிருப்பதே வில்லங்கம் ஆகும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை, முழுதாக அறிய முடியும்.


பட்டாகள்: அதேபோல பட்டா, சிட்டா, அடங்கல் என்ற வார்த்தைகளும் நிலப்பத்திரத்தில் தவிர்க்க முடியாத வார்த்தைகளாகும்.. ஒருவர் தன்னுடைய சொத்து மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணத்தின் பெயர்தான் பட்டாக்கள்..


அரசு தரப்பில் வழங்கப்படும் இந்த ஆவணத்தில், பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம், மற்றும் நில உரிமைதாரரின் பெயர், சர்வே எண், உட்பிரிவு, நன்செய் நிலம்/புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி, தீர்வை விவரங்கள் என அனைத்துமே முழுமையாக பதிவாகியிருக்கும்.


சிட்டா: அதேபோல, சிட்டா என்பது, ஒருவருடைய சொத்து எந்த பகுதியில் அமைந்துள்ளது? அதன் அளவு என்ன? அந்த நிலத்துக்கு யார் சொந்தக்காரர்? நஞ்சை நிலமா? புஞ்சை நிலமா? வறண்ட நிலமா? ஈர நிலமா? போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணமே சிட்டா...


வருவாய்த்துறை வழங்கும் இந்த ஆவணத்தை, கிராம நிர்வாக அலுவலர் நிர்வகிப்பார்.. இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால், பட்டாவின் ஒரு பகுதிதான் சிட்டா என்பதாகும்.. ஒரு நிலத்தின் பரப்பளவு பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதியில் உள்ளது என்பது போன்ற விவரங்கள் அடங்கியதே அடங்கல் என்பதாகும். இந்த ஆவணத்தையும் வருவாய்த்துறையே வழங்குகிறது.

No comments:

Post a Comment

VOTER ID

 வோட்டர் ஐடி மிகவும் பழைமையானதாக உள்ளதா இங்கே க்ளிக் செய்து புதுமையானதாக மாற்றிக் கொள்ளவும்...      Click