நாட்டுப்புற பாடல்


ஏலோலங்கடி ஏத்தமய்யா ஏத்தம் உனக்கும் கூட ஏத்தமய்யா ஏத்தம் 


நெசமா ராசானு நெஞ்சில கை வைத்து சொல்லுங்கள் எல்லோரும்... ஒரு நாளவது வயலில் சென்று உழைத்துண்டா?? விலங்குகளைப்போலவே விவசாயமும் அழிந்து வருகிறது !


அந்த காலத்தில் பத்து பிள்ளைகளை பெற்றெடுத்த கருப்பை பலஹீனமடைந்து

இப்போது ஒன்றுக்கே கண்முழி பிதுங்குவதைப்போல..


இயற்கை உரங்களை மறந்து இரசாயன உரத்தினால் பூமித்தாயின் கருவரை எளிதில் கருவை கலைத்து விடுகிறது !அல்லது குறை பிரசவம் பிரசவிக்கிறது !!


நபிகள் நாயகத்தைப்போல ஒரு மலையின் உச்சியில் நின்றபடியே நானும் கேட்கிறேன்:

சதா வீடு வயல் என உழைக்கும் விவசாயிகள் யாருக்காவது வயிறுக்குமேல் வயிறு இருக்கிறதா???


அந்த காலத்தில் காலை ஐந்து மணிக்கு எங்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறினால் வயலுக்கு! இப்போது வெளியேறுவது வாக்கிங் என்பதற்கு!! வயல்வெளி, வீடுகளில் உழைத்த பெண்கள் ஆண்களுக்கு உடற்பயிற்சி அநாவசியமாயிற்று! இப்போது சிலரக்கு உடற்பயிற்சி கூடமே உழைப்பென்ற அத்தியாவசியமாயிற்று!! தென்னைகளைப்போலவே

அன்றைய பெண்களுக்கும் ஆண்களுக்கும் தொப்பை இருப்பதில்லை !!


ஒவ்வொரு சொட்டு வியர்வை துளியும் ஒரு ருபாய் என்பது விவசாயிகளின் கணக்கு!! களை பிடுங்கி களைத்து போய் ஒரு செம்பு குடிக்கும் தண்ணீரில்தான் சொர்க்கமே இருக்கு!! நமக்கெல்லாம் மழையில் நனைந்தால்தான் உடல் முழுவதும் நனையும்! விவசாயிகளுக்கு உழைத்தாலே உடலில் மழை பெய்யும் !!


உடல் தேய தேய உழைத்து விறுவிறுனு வீட்டுக்கு வந்து வேப்பமரத்தின் அடியில் உடல் காயவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில்..

நான் போறேன் நான் போறேனு கதறிகிட்டு உடல் அழுக்குகள் வெளியேற கரகரனு தேய்த்துக்குளித்து..


எல்லாம் முடிஞ்சி வாழை இலை போட்டு கசாப்புகடகாரனாய் நடுப்பக்கம் கையால வெட்டி இட்லி அவிஞ்சி இறக்கும்முன் தண்ணீர் தெளிப்பதைப்போல தண்ணீர் தெளித்து நார்தங்காய் ஊறுகாயோடு உணவை சாப்பிட்டால்..


கண்ணுல கண்ணாமூச்சி காட்டுன தூக்கம் காந்தம் மாதிரி வந்து ஒட்டிக்கிடுமா இல்லையா !!!


Dr.ஆறுமுகம் கணேசன்

No comments:

Post a Comment

விநாயகர் சதுர்த்தி PROMPT

  Create a highly realistic, premium cinematic Tamil Vinayagar Chaturthi greeting poster in 9:16 vertical format, using the uploaded referen...