500 கோடி எதுக்குடா...?

 “டேய் ஃபேன மூணுல வைடா ரொம்ப குளிருது”


“அததான் கூகுள்ல தேடிட்டு இருக்கேன்”


“கூகுள்லயா”


“ஆமாப்பா இதுவரை நிலாக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா இந்த நாலு நாடுகள் ராக்கெட் அனுப்பி இருக்கு” 


“சரிடா” 


“நிலாக்கு 12 பேர் போய் வந்திருக்காங்க அத்தனை பேரும் அமெரிக்ககாரனுங்க”


“சரிடா அதுக்கு இப்ப என்ன”


“அதான்பா நிலாவுக்கு மொத்தமா 72தடவ ராக்கெட்டுங்க போயிருக்கு 7தடவ மனுஷங்க போய் இறங்கி இருக்காங்க 21 தட ரோவர் வாகனம் நிலவில் ரவுண்ட்ஸ் போய் வந்திருக்கு”


“இதை ஏன்டா இப்ப என்கிட்ட சொல்லிட்டு இருக்க” 


“நிலாவுல ஒரு பொருள கொண்டு போய் வைக்கணும்னா 500 கோடி ரூபாய் செலவாகுமாம் உன்கிட்ட 500 கோடி இருக்கா”


“500 கோடி எதுக்குடா”


“நீ தானப்பா ரொம்ப குளிருது ஃபேனை 'மூன்'ல வைக்க சொன்னே”


“நாசமா போனவனே..ஃபேன் ஸ்பீட குறைச்சி வைக்க சொன்னதுக்கா இத்தனை அக்கப்போரு”

No comments:

Post a Comment

விநாயகர் சதுர்த்தி PROMPT

  Create a highly realistic, premium cinematic Tamil Vinayagar Chaturthi greeting poster in 9:16 vertical format, using the uploaded referen...