200 ஆண்டுகள் பழமையான தூக்குமேடை;


 

 



தொல்லியல் ஆய்வு கோரும் மக்கள்

தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தூக்குமேடை, இன்றைக்கும் தஞ்சாவூரில் வரலாற்று சின்னமாக வீற்றிருக்கிறது. இதனை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன்பு, தஞ்சாவூரை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். அப்போது, தஞ்சாவூர் பெரிய கோயில் பின்புறம் சேவப்பநாயக்கன் ஏரியின் மேல் கரையில் 20 தூக்கு மேடை கட்டப்பட்டுள்ளது. தரையிலிருந்து 10 அடி உயரத்தில் செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் கலவையால் 200 அடி நீளத்திலும் 30 அடி அகலத்திலும் இந்த தூக்குமேடை கட்டப்பட்டுள்ளது. காலப்போக்கில் சேவப்பன் நாயக்கன் ஏரி குடியிருப்பு பகுதியாக மாறிப்போனது. இங்கு அமைந்துள்ள தூக்குமேடை கடந்த காலங்களில் பல முறை ஆக்கிரப்பு முயற்சிக்கு உள்ளானபோது, இப்பகுதி மக்கள் அதனை தடுத்து நிறுத்தி பாதுகாத்து வந்துள்ளார்கள்.

முறையான பராமரிப்பு இல்லாமல், மேற்கூரை சிதிலமடைந்ததால், தற்போது வெறும் கட்டடம் மட்டும் எஞ்சியுள்ளது. 

தமிழக அரசு இதனை பராமரித்து இதனைப் பாதுகாக்க வேண்டும் என்பது தஞ்சை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.....

No comments:

Post a Comment

விநாயகர் சதுர்த்தி PROMPT

  Create a highly realistic, premium cinematic Tamil Vinayagar Chaturthi greeting poster in 9:16 vertical format, using the uploaded referen...