இந்திய குடியுரிமைக்கு ரீசார்ஜ்..!


மோடியின் மிகப்பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்று..

ஒரு காலம் ஒன்று இருந்தது.

ஒரு சிம் வாங்கினால்..பேசுவதற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டியது இருக்கும்.

மற்றபடி நீங்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு வரவேண்டிய போன் கால்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.

தொலை தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்குகிறது எனவே மாதம் 16 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள்.

அதன்படியே நாமும் மாத மாதம் 16 ரூபாய்க்கு டாப் அப் செய்து, இதன் மூலம் நமக்கான நம்பரை நாம் தக்க வைத்துக் கொண்டோம்.

நமது போனின் தொலை தொடர்பு நம்பரை தான் வங்கிக் கணக்கு, எரிவாயு பதிவு செய்தல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு என அனைத்திலும் பதிவு செய்ய சொன்னார்கள்,

 நாமும் அப்படியே பதிவு செய்தோம். இதையே நல்ல வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்டு

 இப்போது நமது தொலைபேசி எண்ணின் சேவையை தொடர மாதம் 199 ரூபாய் என கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க தொடங்கி விட்டார்கள்.

உங்களின் தொலைபேசி எண்ணிற்கான இந்த மாதாந்திர கட்டணத்தை நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் தொலைபேசி எண் ரத்து செய்யப்படும்.

அப்படி உங்கள் எண் ரத்து செய்யப் பட்டு விட்டால்,

ரேஷன் கார்டு, வங்கி பரிவர்த்தனைகள், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு இன்னும் நீங்கள் வேறு எங்கெங்கெல்லாம் உங்கள் தொலை பேசி எண்ணை பதிவு செய்து வைத்திருக்கிறீர்களோ, அத்தனையும் ரத்து செய்யப்படும்.

இதை இன்னும் நீங்கள் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால்,

மாதம் 199 ரூபாயை நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணிற்கான கட்டணமாக கட்டவில்லை என்றால்

உங்களின் அடிப்படை குடியுரிமை என்கின்ற உரிமையையே நீங்கள் இழந்து விடுகிறீர்கள். 

நீங்கள் இந்தியன் தான் என்று நிறுபிக்கவும், உங்களின் குடியுரிமையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும்

மாதா மாதம் 199 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்கின்ற இழிவான ஒரு நிலைக்கு இந்த தேசத்தின் மக்களை தள்ளியது தான் கடந்த 10 ஆண்டுகளின் சாதனை.

சற்று அனைவரிடம் எடுத்துச் செல்லுங்கள்

No comments:

Post a Comment

விநாயகர் சதுர்த்தி PROMPT

  Create a highly realistic, premium cinematic Tamil Vinayagar Chaturthi greeting poster in 9:16 vertical format, using the uploaded referen...