நண்டான்கோவில், திருந்துதேவன்குடி, கும்பகோணம்....!


கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவில் திருவிசநல்லூர் அருகில் அமைந்துள்ளது.


தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 42வது தலம் ஆகும்.


குதிரைப் பூட்டிய தேர்! திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் ஆலயத்தின் சுவரில் காணப்படும் இந்த சிற்பத்தில் கீழே சோழ மன்னன்.. ஏன் ? ராசராசசோழனாக கூட இருக்கலாம்,தனது மனைவியர்களுடன் தனது குருவான கருவூர் தேவருக்கு காணிக்கை செலுத்துவது போன்றும், மேலிருந்து தேவர்கள் வாழ்த்துவது போன்றும் காணப்படுகிறது. ஈசனை நண்டு பூஜை செய்து வணங்குவது போன்றும் உள்ளது.


இக்கோயில் பற்றிய பதிகத்தில் கொல்லிப் பண்ணில் அமைந்த 11 பாடல்கள் உள்ளன. இத்தலம் சுற்றிலும் வீடுகள் ஒன்றுமின்றி வயல் மத்தியில் தனிக் கோயிலாக உள்ளது என்னும் குறிப்பு ஒன்று உள்ளது.


மருந்து வேண்டில் இவை மந்திரங்கள், இவை

புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள், இவை

திருந்து தேவன்குடித் தேவர் தேவு எய்திய

அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே.

 

No comments:

Post a Comment

விநாயகர் சதுர்த்தி PROMPT

  Create a highly realistic, premium cinematic Tamil Vinayagar Chaturthi greeting poster in 9:16 vertical format, using the uploaded referen...